அஸ்பாரகஸ் டிப்
தேவையான பொருட்கள்

அஸ்பாரகஸ் துண்டுகள் (வெந்து வடிய வைத்தது) - 1 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகுப் பொடி - தேவைக்கேற்ப
பச்சைக் குடைமிளகாய்த் துண்டங்கள் - 1/4 கிண்ணம்
பச்சை மிளகாய் - 2 (அதிகக் காரம் தேவைப்பட்டால்)
sour cream அல்லது
மிக கெட்டியான
தயிர் - 1/2 கிண்ணம்
இரண்டு சதவிகித காட்டேஜ்
பாலாடைக் கட்டி (2% Cottage Cheese) - 2 தேக்கரண்டி
பகுதிக் கொழுப்பு நீக்கிய ரிக்கோடா பாலாடைக் கட்டி (Part skim Riccotta cheese) - 2 தேக்கரண்டி
பூண்டு (தேவையானால்) - 1 பல்
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி

செய்முறை

மேல் உள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும் (whip). ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் இதைப் போட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் குறைந்தது 2 மணி நேரம் வைக்கவும். பின்னர் சோள வறுவலை (tortilla chips) இந்த டிப்பில் தோய்த்துச் சாப்பிட மிக நன்றாக இருக்கும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com