சக்ரா
விஷால் நடிக்கும் படம். கதாநாயகிகளாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், சிருஷ்டி டாங்கே, ரெஜினா நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் மனோபாலா, ரோபோ ஷங்கர், கே.ஆர். விஜயா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: யுவன்ஷங்கர்ராஜா. புதுமுக இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். இப்படம் பற்றி இவர், "குடும்ப உணர்வுகளோடு, தொழில்நுட்பம் சார்ந்த ஆக்‌ஷன் த்ரில்லரை, தேசபக்தியுடன் சொல்லியிருக்கும் படம் சக்ரா. தொழில்நுட்பம் சார்ந்தது என்பதால் மூளைக்கும் வேலை கொடுக்கும்" என்கிறார். விஷாலுக்கு ராணுவவீரர் வேடமாம். காவல்துறை அதிகாரியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.

அரவிந்த்

© TamilOnline.com