வெளிநாட்டு இந்தியக் குடிமகன் அட்டை (OCI Card)
சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள இந்திய தூதரகம் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது:

OCI Card வைத்திருக்கும் சிலர், இந்தியாவுக்கு விமானம் ஏறமுடியாமல் தடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. காரணம், அவர்களுடைய தற்போதைய பாஸ்போர்ட் எண்ணும், OCI அட்டையில் காணப்படும் பாஸ்போர்ட் எண்ணும் ஒன்றல்ல என்பது. இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க, OCI அட்டை குறித்த கீழ்க்கண்ட வழிகாட்டலைக் கவனிக்கவும்:

20 வயதுவரை:
ஒவ்வொரு முறை பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்கும்போதும், அத்துடன் OCI அட்டையைப் புதிதாக வாங்கிக்கொள்ள வேண்டும்.

21-25 வயதுவரை:
பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்கும்போது OCI அட்டையை மீண்டும் பெற வேண்டியதில்லை. அவர்கள் OCI அட்டையுடன் அதில் காணப்படும் எண்ணுள்ள பழைய பாஸ்போர்ட்டையும் உடன் எடுத்துச் செல்லவேண்டும்.

50 வயது நிரம்பியதும்:
ஒருமுறை மட்டுமே OCI அட்டை கட்டாயமாக மீண்டும் பெறப்பட வேண்டும்.

மேலும் தகவலுக்கு: www.ociservices.gov.in

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com