கேரள மாநில அரசும், சபரிமலை தேவசம் போர்டும் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. இவ்விருதை இதுவரை கே.ஜே. யேசுதாஸ், கங்கை அமரன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், சித்ரா, பி. சுசீலா ஆகியோர் பெற்றுள்ளனர். 2019ம் ஆண்டுக்கான விருதுக்கு இளையராஜா தேந்தெடுக்கப்பட்டுள்ளார். தேசிய ஒருமைப்பாடு மற்றும் மதநல்லிணக்கத்தில் சிறந்து விளங்குவதற்காக ராஜா இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 'Worshipful Music Genius' என்ற பட்டத்துடன், 100,000 ரூபாய் பரிசுத்தொகையும் அடங்கியது இவ்விருது.
செய்திக்குறிப்பிலிருந்து |