விஷ்ணுபுரம் விருது பெறுகிறார் அபி
அரசுசார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் அவரது நண்பர்களால் 2010 ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். இது ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த சிறந்த படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கிக் கௌரவித்து வருகிறது. இதுவரை ஆ. மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சீ. முத்துசாமி, ராஜ் கௌதமன் போன்றோர் விருது பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக்கான (2019) விருதுக்கு கவிஞர் அபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விருது 100,000 ரூபாய் ரொக்கமும், கேடயமும், கொண்டது. இவ்விழாவின் சிறப்பு, பரிசு பெறுபவர் குறித்த ஆவணப்படத்துடன் அவரது வாழ்க்கை, படைப்பு பற்றிய புத்தகமும் வெளியிடப்படுவதுதான்.

'மெளனத்தின் நாவுகள்', 'அந்தர நடை', 'என்ற ஒன்று', 'அபி கவிதைகள்' என நான்கு நூல்களை எழுதியிருக்கிறார் அபி. கவிக்கோ விருது, சிற்பி இலக்கிய விருது போன்ற விருதுகளைப் பெற்றவரின் மகுடத்தில் மேலும் ஒரு இறகாய் இவ்விருது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com