எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் நஞ்சுண்டன்
தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவரும், தேர்ந்த மொழிபெயர்ப்பாளருமான நஞ்சுண்டன் (58) காலமானார். "தமிழில் வெளியாகும் படைப்புகள் செம்மையாக்கம் செய்யப்பட்டு வந்தால் மேலும் அதன் சிறப்புக் கூடும்" என்ற கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர். தாய்மொழி கன்னடம் என்றாலும் தமிழால் ஈர்க்கப்பட்டு அதனைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ்ப் படைப்புகள் இலக்கணப் பிழை இல்லாமல் எழுதப்பட வேண்டும் என்ற உந்துதலில் தன் சொந்தச் செலவில் பல பயிலரங்குகளை நடத்தினார். பல இளம் படைப்பாளிகளை ஊக்குவித்தார். கன்னடத்திலிருந்து பல படைப்புகளைத் தமிழில் தந்திருக்கிறார். 'அக்கா' என்ற கன்னட இலக்கிய மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். பெங்களூரு பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த நஞ்சுண்டன் மாரடைப்பால் காலமானார்.



© TamilOnline.com