கணிதப் புதிர்கள்
1. 12345789 - இந்த எண்ணை நான்கு எண்கள் கொண்ட இரண்டு பிரிவாகப் பிரிக்க வேண்டும். அந்த இரண்டு பிரிவுகளிலும் உள்ள எண்களை மேலும் இரு பிரிவாகப் பிரித்து, ஒன்றோடு ஒன்று கூட்டினால் இரண்டு பிரிவிலும் ஒரே எண் விடையாக வரவேண்டும். எப்படி?

2. 64253 என்ற ஐந்திலக்க எண்ணை 365ல் பெருக்கினால் 23452345 என்ற எட்டிலக்க எண் விடையாக வருகிறது. அதாவது முதல் நான்கு எண்களே (2345) திரும்ப வருகிறது. இதே வகையில் அமையக்கூடிய உயர்ந்தபட்ச எட்டிலக்க எண் எதுவாக இருக்கும்? அதற்கு மூலமாக அமையக்கூடிய எண் எது?

3. ஒரு குடும்ப விழாவில் தாத்தா, பாட்டி, 2 தந்தையர், 2 தாய்கள், 4 குழந்தைகள், 3 பேரக்குழந்தைகள், 1 சகோதரர், 2 சகோதரிகள், 2 மகன்கள், 2 மகள்கள், 1 மாமனார், 1 மாமியார் மற்றும் 1 மருமகள் என மொத்தம் 23 உறவினர்கள் உள்ளனர். விருந்து பரிமாற ராமு அங்கே சென்று பார்த்தால் இருந்தது 7 பேர் மட்டுமே. ஆனால், அதில் முன்கூறிய அனைவருமே அடங்கி இருந்தனர். எப்படிச் சாத்தியம்?

4. அவை அடுத்தடுத்து அமைந்துள்ள ஐந்து இலக்க எண்கள். ஆனால் வரிசை மாறி அமைந்துள்ளன. அவ்வரிசையில் முதல் இரண்டு எண்களுடன் மூன்றாவது எண்ணைப் பெருக்கினால் நான்கு மற்றும் ஐந்தாம் எண் சேர்ந்து விடையாக வருகிறது. அப்படியென்றால் அந்த எண்கள் எவை? இதே மாதிரியில் அமைந்த ஆறிலக்க எண்களைக் கூற முடியுமா?

5. 15, 29, 42, 54,... வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com