உலகளாவிய அகண்ட பஜனை
2019 நவம்பர் 9ம் தேதி மாலை 5 மணிமுதல், 10ம் தேதி மாலை 6 மணிவரை உலகெங்கிலுமுள்ள சத்திய சாயி அமைப்புகள் வருடந்தோறும் உலக அமைதிக்காக அகண்ட பஜனை செய்வது வழக்கம். அவ்வகையில் இவ்வாண்டு சத்திய சாயி சர்வதேச அமைப்பின் ஏழாம் மண்டல பக்தர்கள் ஒன்றுகூடி கலிஃபோர்னியாவின் யூனிவர்சிட்டி ஆஃப் சிலிக்கான் ஆந்திரா வளாகத்தில், குளோபல் அகண்ட பஜனை நடத்தினர்.

மனதை எவ்வாறு நல்ல நோக்கத்தில் நிலை நிறுத்துவது என்ற பயிற்சியுடன் பக்தர்கள் இந்நிகழ்ச்சியைத் தொடங்கினர். ஒவ்வொரு முறை கடவுள்மீது மனம் உருகிப் பாடும்பொழுதும் மனதைக் குவிப்பதே அதன் குறிக்கோள். எம்மதமும் சம்மதம் என்ற பகவானின் நெறிமுறைப்படி, சர்வமதப் பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து தியானம், வாத்தியக் கருவிகள் இசை, குழுப் பாடல்கள், சுப்ரபாதம், காலை ராகங்களில் பாடல்கள் போன்றவை இந்த ஆண்டின் சிறப்பு அம்சங்களாக அமைந்தன. பகவான் கூறியபடி சுற்றுச்சூழலையும் மனத்தையும் தூய்மைப்படுத்தும் தெய்வீக அனுபவமாக அகண்ட பஜனை அமைந்தது.

பத்மநாபன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com