சிண்ட்ரெல்லா
'சிண்ட்ரெல்லா' என்றால் தேவதை என்றுதானே நினைக்கிறீர்கள். இல்லை, பேய்! ராய்லட்சுமி, சாக்‌ஷி அகர்வால், ரோபோ சங்கர், 'கல்லூரி' வினோத், கஜராஜ் நடிக்கும் படம் இது. எஸ்.ஜே. சூர்யாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வினோ வெங்கடேஷ் இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார். "பேய்ப்படங்களுக்கு இங்குள்ள ஹைதர் காலத்து பார்முலாவில் இருந்து விலகி, விறுவிறுப்பான படமாக உருவாகிறது இது. ராய் லட்சுமி இதில் ஏற்றுள்ள வேடம் அவருக்குள்ள இமேஜை உடைக்கும்" என்கிறார் வினோ. 'காஞ்சனா 2' படத்திற்கு இசையமைத்த அஸ்வமித்ரா இதற்கும் இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com