ரூம்
அபிஷேக் வர்மா நாயகனாக அறிமுகமாகும் படம் இது. நாயகியாக மனோசித்ரா நடிக்கிறார். படத்தின் பெரும்பகுதி ஒரு பாத்ரூமுக்குள் நடப்பதால் இந்தத் தலைப்பாம்! 'அம்முவாகிய நான்' மற்றும் 'நேற்று இன்று' ஆகிய படங்களை இயக்கிய பத்மா மகன் இதை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கு இசை வினோத் யஜமான்யா. இந்த அதிரடி த்ரில்லர் விரைவில் வெளியாகும்.

அரவிந்த்

© TamilOnline.com