சம்பவம்
மனச்சாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலையால் நேர்மைக்குப் புறம்பாகத் தள்ளப்படுகிறான். அதனால் என்னென்ன விபரீதங்கள் ஏற்படுகின்றன என்பதைச் சொல்கிறது இப்படம். ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இருவரும் கதாநாயகர்கள். நாயகிகளாகப் பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்க, உடன் கிஷோர் தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ், இயக்குநர் ஏ. வெங்கடேஷ், பேபி ஸ்ருதிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ. வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். இசை: அம்ரீஷ்.

அரவிந்த்

© TamilOnline.com