ஆலம்பனா
வைபவ் நாயகனாகவும் பார்வதி நாயகியாகவும் நடிக்கும் படம் இது. முக்கிய வேடத்தில் முனீஸ்காந்த் நடிக்கிறார். ஆனந்த்ராஜ், காளி வெங்கட், கபீர் துஹான் சிங், முரளி சர்மா, திண்டுக்கல் லியோனி உள்ளிட்டோர் உடன் நடிக்கின்றனர். முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களை இயக்கிய ராம்குமாரிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்த பாரி கே. விஜய் இயக்குகிறார். குடும்பத்தில் எல்லோரையும் கவரும் வண்ணம் ஃபேன்டஸி படம் இது. ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். அலாவுதீனும் அற்புத விளக்கும் கதையின் நவீன வடிவமே இப்படம்; அலாவுதீன் - வைபவ், பூதம் - முனீஸ்காந்த் என்கிறார் கோலிவுட் கோவிந்து. மந்திரவாதி யாரோ?

அரவிந்த்

© TamilOnline.com