இ-டூரிஸ்ட் விசா தாராளமயம்
சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள இந்திய கான்சல் ஜெனரல் அலுவலகத்திலிருந்து கீழ்க்கண்ட தகவல் பெறப்பட்டுள்ளன.

இந்தியாவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துப் பெறுகின்ற இ-டூரிஸ்ட் விசா வழிமுறையை இந்திய அரசு கீழ்க்கண்ட மாற்றங்களைக் கொண்டுவந்து தாராளமயம் ஆக்கியுள்ளது.
ஒருமாத காலம் செல்லுபடியாகும், $25 கட்டணம் கொண்ட குறுகியகால இ-விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வரும் காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் இந்தக் கட்டணம் $10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
வழக்கமான $80 இ-டூரிஸ்ட் விசாவின் அனுமதிக் காலம் ஓர் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளாகவும், இந்தக் காலத்தில் பலமுறை வந்து போகலாம் எனவும் மாற்றப்பட்டுள்ளது.
ஓராண்டுக்கான இ-டூரிஸ்ட் விசாவிற்கான கட்டணம் $80ல் இருந்து $40 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குச் சுற்றுலாப் பயணமாகச் செல்லும் விசாக்களுக்கு விண்ணப்பிக்கவும், பிற விசாக்களைப் பற்றிய முழு விவரங்களைக் காணவும்: indianvisaonline.gov.in

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com