சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு நடன விழா
ஜூன் 11, 2005 அன்று பிரபல சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு நடன விழா (Ethnic Dance Festival) நித்யா வெங்கடேஸ்வரனின் பரதநாட்டியத்தோடு பேலஸ் ஆ·ப் ·பைன் ஆர்ட்ஸில் துவங்கியது. முதலில் நடராஜப் பெருமானுக்குப் புஷ்பாஞ்சலியும் அடுத்து பாரதியாரின் சிவசக்தி பாடலுக்கு அபி நயமும் அன்றைய நிகழ்ச்சியாக அளித்தார். ஸ்ரீ கிருபா நடனக் குழுமத்தின் கலை இயக்குனரான குரு விஷால் ரமணி நடனத்தை வடிவமைத்திருந்தார்.

இவரது நடனத்தை அடுத்துச் சீனா, கம்போடியா, பொலிவியா, கொரியா, டோங்கா மற்றும் பல நாடுகளின் நடனங்களும் இடம்பெற்றன. அன்றைய நிகழ்ச்சிக்கு 'தொடக்கங்கள்' என்பது மையக் கருத்தாக இருந்தது.

அன்று, நிகழ்ச்சியின் தொடக்கவிழாவுக்கு முன் நடந்த வரவேற்பில் சான்பிரான்சிஸ்கோவில் இருக்கும் இந்தியத் துணைத்தூதர் பிரகாஷ் அவர்கள் நித்யா வெங்கடேஸ்வரனுக்கு சான்பிரான்சிஸ்கோ ·பவுண் டேஷன் விருதை வழங்கிக் கௌரவித்தார். இதிலும் அடுத்துவந்த நாட்டிய நிகழ்ச்சிகளிலும் 16 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொடர்ந்து இரண்டு வார காலம் நடைபெற்ற இந்த விழாவில் மொத்தம் இருபது நாடுகள் பங்கேற்றன.

மேலும் விவரங்களுக்கு:
www.worldartswest.org/edf/dancers/bharatanatyam_NityaVenkateswaran.html

© TamilOnline.com