உருளைக்கிழங்கு சாதம்
தேவையான பொருட்கள்
வடித்த சாதம் - 2 கிண்ணம்
உருளைக்கிழங்கு (நறுக்கியது) - 1 கிண்ணம்
வெங்காயம் - 1/2 கிண்ணம்
கேரட் (நறுக்கியது) - 1/2 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
கடலைப்பருப்பு - 1 தேயிலைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
கொத்துமல்லி விதை - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிய துண்டு
கடுகு - 1 தேயிலைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேயிலைக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேயிலைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
உருளைக்கிழங்கை தோலுடன் ஒரு அங்குல நீளத்திற்கு மெல்லியதாய் நறுக்கவும். கேரட், வெங்காயம் அதேபோல் நறுக்கி, வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அதில் போட்டு வதக்கவும். உப்பு போடவும். நன்றாக வேகும்வரை வதக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கொத்துமல்லி விதை, மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு, பெருங்காயம் வறுத்து, அதில் தேங்காயும் போட்டுப் பிரட்டி, மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும். வதக்கிய காயுடன் இதைப் போட்டு, கரம் மசாலா போடவும். வைத்துள்ள சாதத்தைப் போட்டு, நெய் விட்டு நன்றாக வதக்கி, கறிவேப்பிலை, கொத்துமல்லி நறுக்கிப் போடவும். முந்திரிப்பருப்பு வறுத்தும் போடலாம். இது ஒரு சுவைமிக்க சாதம் ஆகும்.

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com