ஸ்ரீ காமாட்சி சமூக மையம்: நவராத்திரி, சுமங்கலி பூஜை
சான்டா கிளாரா, கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்ரீ காமாக்ஷி சமூக மையம் (SKCC) நவராத்திரி விழா, சஹஸ்ர சுவாசினி (1000 சுமங்கலிகள்) பூஜை மற்றும் கன்யா பூஜைகளைச் சிறப்பாக நடத்தியது. நவராத்திரியின் எல்லா நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விரிகுடாப் பகுதியில் உள்ள இசை, வாத்திய மற்றும் நடனக் கலைஞர்கள் அம்பாளுக்கு 9 நாட்களும் இசை, நாட்டிய அஞ்சலி செய்தனர்.

அக்டோபர் 13ம் தேதி சான் ஹோசேயில் உள்ள எவர்கிரீன் பள்ளி வளாகத்தில் 1000 சுமங்கலிகள் லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் பக்திப் பாடல்களால் அம்பாளைத் துதித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் அம்பாள் படம், அக்ஷதை மற்றும் குங்குமம் கொடுக்கப்பட்டது. எல்லோரும் ஒருசேர அம்பாளுக்குக் குங்குமார்ச்சனை செய்தது கண்கொள்ளாக் காட்சி.

நிகழ்ச்சிகளை ஸ்ரீ சந்திரமௌலி நாராயண சாஸ்திரிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் மகாபெரியவர் அனுக்கிரஹத்துடன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் மற்றும் தாம்பூலம் வழங்கப்பட்டது.

ராஜேஸ்வரி ஜெயராமன்,
சான்டா கிளாரா, கலிஃபோர்னியா

© TamilOnline.com