நவம்பர் 2019: வாசகர்கடிதம்
தென்றல் அக்டோபர் இதழில் கோசேவா ராதாகிருஷ்ணன் நேர்காணல் மிகச் சிறப்பாக இருந்தது. அவர் பசுப்பாதுகாப்பில் இளைஞர்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்கிறார். ஹரி கிருஷ்ணன் எழுதிய 'வரங்களும் சாபங்களும் பெற்றான் எமக்குப் பிடித்த பல ஆன்மீகத் தகவல்களைக் கொண்டிருந்தது. இளம் சாதனையாளர் லிடியன் நாதஸ்வரம் இந்த இதழுக்கு மகுடமாகத் திகழ்கிறார். இத்தனை இளவயதில் அவர் செய்திருக்கும் நம்பற்கரிய சாதனை, உலக அளவில் இளையோருக்கு வழிகாட்டுவதாக உள்ளது. அவருடைய பெற்றோரும் பாராட்டுக்கு உரியவர்களே.

ஆர். கண்ணன், கீதா கண்ணன்,
சான்ட க்ளாரா

★★★★★


மாயாபஜாரில் சொல்லப்பட்டிருந்த கற்றாழை மோர் செய்முறை புதுமை. வெயில் நேரத்துக்குச் சிறந்த பானமும்கூட. வ.உ. சிதம்பரம் பிள்ளை பற்றிய கட்டுரையில் பாரதியின் தந்தை சின்னசாமிப் பிள்ளை என எழுதப்பட்டிருந்தது. சின்னசாமி ஐயர் என்பதே சரி. கோசேவா ராதா கிருஷ்ணன் அவர்களின் நேர்காணல் பல அரிய தகவல்களைக் கொண்டதாக இருந்தது. தென்றல் மட்டுமே இதுபோன்ற செய்திகளை மக்களுக்குச் சிறப்பாகத் தருகிறது.

வித்யாலக்ஷ்மி,
சிமிவேலி, கலிபோர்னியா

(பாரதியாரின் தந்தையார் பெயரில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம். சுட்டியமைக்கு நன்றி. - ஆசிரியர், தென்றல்)

© TamilOnline.com