அக்னி நட்சத்திரம்
கார்த்திக்-பிரபு நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், 1988ம் ஆண்டில் வெளியாகி வெற்றிபெற்ற படம் அக்னி நட்சத்திரம். அதே தலைப்பில் மீண்டும் ஒரு படம் தயாராகிறது. க்ரைம் த்ரில்லராக உருவாக இருக்கும் இப்படத்தில் விதார்த், உதயா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். பா. விஜய் பாடல்கள் எழுத, ஒய்.ஆர். பிரசாத் இசையமைக்கிறார். விஷ்ணுவர்த்தன், மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சரண், இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com