ஜனகணமன
ஜெயம் ரவி ராணுவ வீரராக நடிக்கும் படம் இது. அதிரடி ஆக்‌ஷன் படமான இதில் டாப்ஸி, ஈரான் நடிகை ல்னாஸ் நோரோஸி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். அர்ஜுன், நானா படேகர், எம்.எஸ். பாஸ்கர், டயானா எரப்பா, ராம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 'என்றென்றும் புன்னகை' படத்தை இயக்கிய அகமது இதை இயக்குகிறார். ஜெயம் ரவியின் 25வது படம் இது. இசை: யுவன்ஷங்கர்ராஜா. இப்படத்திற்காகச் சண்டைக் கலைஞர்கள் ஹாலிவுட்டில் இருந்து வந்திருக்கிறார்கள் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com