விஜய் 64
விஜய் நாயகனாக நடிக்கும் புதிய படம் இது. பெயர் சூட்டப்படாத இப்படத்தில் விஜய் கல்லூரிப் பேராசிரியர் வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். உடன் சாந்தனு, சஞ்சீவ், ஆண்டனி வர்கீஸ், ஶ்ரீமன், ஶ்ரீநாத் எனப் பலர் நடிக்கின்றனர். அநிருத் இசையமைக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகிக் கொண்டிருக்கும் இப்படம், அடுத்த வருடம் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி வெளியாக இருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com