பத்மஸ்ரீ நானம்மாள்
"யோகாப்பாட்டி" என்று செல்லமாக அழைக்கப்படும் நானம்மாள் (99) காலமானார். 90 வயதைக் கடந்தும் கடினமான பல யோகாசனங்களை சர்வசாதாரணமாகச் செய்து அசத்திய இவர், பொள்ளாச்சிக்கு அருகே உள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ம் ஆண்டு பிறந்தார். தன் தாத்தாவிடமிருந்து யோகாசனங்களைக் கற்ற இவர், 3 வயதிலியே யோகாசனங்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். கணவரும் இவரை ஊக்குவிக்கவே யோக பயிற்சியாளர் ஆனார். இவரிடம் பயின்றவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்களில் பலர் உள்நாடு, வெளிநாடுகளில் யோகக்கலை நிபுணர்களாக விளங்குகின்றனர். இவரது மாணவர்கள் சீனா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், லண்டன், மலேசியா, தாய்லாந்து என பல்வேறு நாடுகளில் நடக்கும் யோகா போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றுள்ளனர்.

சில நாட்கள் முன் படுக்கையிலிருந்து தவறி விழுந்த நானம்மாள் முதுமை காரணமாகக் காலமானார். தவறி விழுவதற்கு முந்தையநாள் வரை விடாமல் தனது யோகப் பயிற்சிகளைச் செய்து வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நானம்மாள் பற்றி முழுதும் அறிய

யோகாப்பாட்டிக்குத் தென்றலின் அஞ்சலி.

© TamilOnline.com