ஜூலை 16, 2005 சனிக்கிழமை அன்று வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் முத்தமிழ் விழாவைக் கொண்டாடுகிறது. அன்று மாலை மூன்று மணிக்கு மவுண்டன் வியூ நகரச் சமுதாயக் கூடத்தில் இந்த விழா நடைபெறும். விழாவில், பட்டி மன்றப் புகழ் பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்கள் தலைமையில், வளைகுடாப் பகுதியின் சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் “தமிழின் பொற்காலம் கடந்த காலமா? வருங்காலமா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்க விருக்கிறது. சங்ககாலப் பெண் புலவர் ஒளவையாரைச் சிறப்பிக்கும் விதமாக சிறுவர்கள் கலந்துகொள்ளும் “பாரி அரசவையில் ஔவை” என்ற நாடகமும் நடைபெறும். மேலும், சிறப்புப் பேச்சாளர் களாக பேரா. முனைவர் அலர்மேலு ரிஷி அவர்கள் சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் குறித்தும், எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி தமிழில் முற்போக்கு எழுத்து என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றவிருக்கிறார்கள்.
சிறுவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளும் விழாவில் நடைபெறவிருக்கின்றன. நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம்.
நாள்: ஜூலை 16, 2005 நேரம்: பிற்பகல் 3:00 மணி இடம்: மவுண்டன் வியூ கம்யூனிடி சென்ட்டர், 201 சவுத் ரெங்ஸ்டிரா·ப் அவின்யூ, மவுண்டன் வியூ 94040. வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் இனி வரும் நிகழ்ச்சிகள்:
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செப்டம்பரில் வருகிறது வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் பெருமையுடன் வழங்கும் தில்லானா குழுவினரின் “மாபெரும் இன்னிசை மற்றும் நடன நிகழ்ச்சி”
சனிக்கிழமை மாலை, செப்டம்பர் 17, 2005 (புரட்டாசி 1, 2036) Smithwick Theater, Foothills College, Los Altos, CA மேற்கொண்டு விவரங்களுக்கு: www.bayareatamilmanram.org
ராஜன் சடகோபன் |