சென்னையில் மார்கழி மாதத்தில் 'சங்கீத சீஸன்' எனப்படும் இசைவிழா எல்லாச் சபாக்களிலும் கொண்டாடப்படுவதை முன்னுதாரணமாகக் கொண்டு, வளைகுடாப் பகுதியின் ஸ்ரீகிருபா நடனக் குழுமம் (Shri Krupa Dance Company) ஒவ்வோராண்டும் ஜூலை முதல் செப்டம்பர் வரை நாட்டியத் திருவிழாவை நடத்திவருகின்றது. 1977-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் வளை குடாப் பகுதியின் முதல் பரதநாட்டியப் பயிற்சிப் பள்ளி என்கிறார் இதன் நிறுவனரும், கலை இயக்குனருமான குரு விஷால் ரமணி.
இந்த ஆண்டின் நாட்டியத் திருவிழா ஜூலை மாதத்தில் சில அரங்கேற்றங்களுடன் தொடங்கி, பின்னர் முழுமையான அரங்க நிகழ்ச்சிகளோடு நடந்து நிறைவுபெறும். ஜூலை மாத அரங்கேற்ற நிகழ்ச்சிகள் பின் வருமாறு:
ஜூலை 16 செஜல் பதானி கௌகர்ஸ் அரங்கம், எவர்கிரீன் வேல்லி ஹைஸ்கூல் ஜூலை 23 அஞ்சனா பாலா சோனியா ஜான் ஓஹ்லோன் கல்லூரி, ·ப்ரீமாண்ட் ஜூலை 24 ஜானவி அதாவலே கபர்லி அரங்கம், பாலோ ஆல்டோ ஜூலை 30 மாயா ராமச்சந்திரன் ஓஹ்லோன் கல்லூரி, ·ப்ரீமாண்ட்
அரங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம்.
அதிகத் தகவலுக்கு: www.shrikrupa.org |