உருளைக்கிழங்கு வளையம்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு (வேக வைத்து மசித்தது) - 2 கிண்ணம்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 3 கிண்ணம்
மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி
கடலைமாவு - 1/2 தேக்கரண்டி
அரிசி மாவு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

மேல்மாவுக்கு
மக்காச்சோள (கார்ன்) மாவு - 1/2 கிண்ணம்
ரவை - 1 மேசைக்கரண்டி
மைதா மாவு - 1 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - சிறிதளவு
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை
உருளைக்கிழங்குடன் வெங்காயம், மிளகாய்ப்பொடி, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு எல்லாம் போட்டு கட்டியில்லாமல் நன்றாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மக்காச்சோள மாவு, ரவை, மைதா, அரிசி மாவு, மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி, பெருங்காயப்பொடி, உப்பு எல்லாம் போட்டு, நீர் விட்டு பஜ்ஜி மாவு போலக் கரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு பிசைந்ததை எண்ணெய் தொட்டுக் கொண்டு பாம்புபோலத் தேய்த்து, வளையம் வளையமாகச் செய்து மாவில் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இது மிகவும் சுவையாக இருக்கும். கெச்சப் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி

© TamilOnline.com