'மனசே ரிலாக்ஸ் பிளீஸ்' புகழ் சுவாமி சுகபோதானந்தா இந்த வேனிற்காலத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மில்பிடஸ் (கலிபோர்னியா), டல்லஸ் (டெக்ஸாஸ்), சிகாகோ (இல்லினாய்ஸ்) பகுதிகளில் கீதைச் சொற்பொழிவுகள் ஆற்ற இருக்கிறார். எங்கே எப்போது என்ற விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
சுவாமி சுகபோதானந்தாவின் சொற் பொழிவுகள், பயிலரங்குகள் நம்மை அறியாமையிலிருந்து விடுவிக்கவும், தூக்கத்திலிருந்து தட்டி எழுப்புவதற்காகவும் அமைக்கப்பட்டு உள்ளன.
இவ்வுலகம் நமக்கு எப்போதுமே பாடங்களைத் தனிச் சிறப்பான வழிகளில் கற்றுத் தரும் ஒரு பல்கலைக் கழகம். இதைப் புரிய வைப்பதற்காகவே என்னுடைய பயிலரங்குகளும், கீதைச் சொற்பொழிவுகளும் நடத்தப்படுகின்றன என்கிறார் சுவாமிஜி. கீதைச் சொற்பொழிவிற்கு நுழைவுக் கட்டணம் இல்லை.
சுவாமிஜியின் சொற்பொழிவு விவரம் வருமாறு: வளைகுடாப் பகுதியில்: இடம்: Jain Temple auditorium (Jain Bhawan) 722 Main Street, Milpitas, California
ஜூலை 15, 2005, மாலை 7:00 முதல் 9:15 வரை
ஜூலை 16, 2005, மாலை 6:00 முதல் 8.30 வரை
தொடர்புகொள்ள: Mahi:mahisank@yahoo.com 408.688.6254 Kamala & Ram: vskamala@yahoo.com 408.205.7035 Aparna& Siva: aparna_sraju@yahoo.com 408.744.1147 Raji:rajashrees@yahoo.com 408.248.4506
டெக்ஸாஸ் பகுதியில்:
இடம்: DFW Temple Auditorium, Irving, TX ஜூலை 22, 2005, மாலை 7:30 முதல் 9:30 வரை
ஜூலை 23, 2005, மாலை 6:00 முதல் 8:00 வரை
ஜூலை 24, 2005, மாலை 6:00 முதல் 8:00 வரை
தொடர்புகொள்ள Dr. Nallu Reddy: ramappa@yahoo.com 972.780.0116
இல்லினாய்ஸ் பகுதியில்: இடம்: 3. Balaji Temple Auditorium, 1145 West Sullivan Rd, Aurora, IL 60507
ஆகஸ்ட் 13, 2005, பிற்பகல் 1:00 முதல் 3:00 வரை
ஆகஸ்ட் 14, 2005, பிற்பகல் 1:00 முதல் 3:00 வரை
தொடர்புகொள்ள: Dr. Vekateswara Rao Kuchpudi: kuchvr@yahoo.com 630.844.2252
இது மட்டுமல்லாது சுவாமிஜி 'Stress management' பற்றிய பயிலரங்கை மவுன்டன் வியூவில் ஜூலை 18 அன்று வழங்க இருக்கிறார். இதனை East West புத்தக நிலையம் ஏற்பாடு செய்துள்ளது. இந் நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர்க்கு சுவாமிஜியின் கையொப்பமிட்ட புத்தகம் ஒன்று இலவசமாக வழங்கப்படும்.
Stress Management பயிலரங்கு விவரம்: நாள்: ஜூலை 18, 2005, மாலை 7:00 முதல் 9:00 வரை இடம்: East-West Bookshop, 324 Castro Street, MountainView நுழைவுக்கட்டணம்: $25 தொடர்புகொள்ள: Usha Shankar 650-701-0671
சுவாமிஜியைப் பற்றி மேலும் அறிய: www.swamisukhabodhananda.org
ஷகிலாபானு |