சங்கத்தமிழன்


படத்தின் நாயகன் விஜய் சேதுபதி. இவருக்கு இப்படத்தில் இரட்டை வேடம். ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு கதாநாயகிகள். வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய சந்தர் இப்படத்தின் இயக்குநர். நாசர், சூரி, ஜான் விஜய், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து உள்ளிட்ட பலர் முக்கிய வேடமேற்றுள்ளனர். இரட்டையர்கள் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படத்திற்காக இசையமைப்பாளர் அநிருத் ஒரு அதிரடியான பாடலைப் பாடியிருக்கிறார் என்கிறது கோலிவுட் குருவி. இப்படம் அக்டோபர் தொடக்கத்தில் வெளியாகிறது.

அரவிந்த்

© TamilOnline.com