அக்னிச் சிறகுகள்
விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் படம் அக்னிச் சிறகுகள். நாயகி ஷாலினி பாண்டே. முக்கிய வேடத்தில் அருண் விஜய் நடிக்கிறார். உடன் பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, செண்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கும் இப்படத்தை, 'மூடர் கூடம்' என்ற வெற்றிப்படத்தைத் தந்த நவீன் இயக்குகிறார். "இது ஒரு திகில் படம். அருண் விஜய் இதுவரை நடிக்காத ஒரு கேரக்டரில் நடிக்கிறார். ஷாலினி பாண்டேவுக்கும் மிக முக்கியப் பங்கு இருக்கிறது. தமிழ், தெலுங்கிற்கு தனித்தனியாகப் படப்பிடிப்பு நடக்கும். கோல்கட்டா, கோவா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது" என்கிறார் நவீன். இசை: நடராஜன் சங்கர். 'அக்னிச் சிறகுகள்' என்றாலே அப்துல்கலாம் நினைவு வருவதைத் தவிர்க்க இயலுமா?அரவிந்த்

© TamilOnline.com