1. ஒரு வியாபாரி அவல் மூட்டையை 600 ரூபாய்க்கு வாங்கினார். அதை 700 ரூபாய்க்கு விற்றார். பின் அதை அவரிடமிருந்தே 800 ரூபாய்க்குத் திருப்பி வாங்கினார். இறுதியில் அதனை 700 ரூபாய்க்கு விற்றார். மொத்தத்தில் அவருக்குக் கிடைத்தது லாபமா, நட்டமா?
2. கீழ்க்கண்ட வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?
1 + 4 = 5
2 + 5 = 12
3 + 6 = 21
8 + 11 = ?
3. பழ வியாபாரி ஒருவர் பெட்டிக்கு 30 பழம் வீதம் இரண்டு பெட்டிகளை எடுத்துப் போகிறார். வழியில் 30 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. பெட்டிக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் பழம் கொடுக்க வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை பழங்கள் மிஞ்சும்?
4. நான்கு பூனைகள், நான்கு நிமிடங்களில், நான்கு எலிகளைப் பிடிக்கின்றன என்றால் 12 பூனைகள், 12 நிமிடங்களில் எத்தனை எலிகளைப் பிடிக்கும்?
5. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 5000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் நுழைவுக் கட்டணமாக $5000 நிதி திரட்டப்பட்டது. ஆண்களுக்கு $3, பெண்களுக்கு $2, குழந்தைகளுக்கு $0.48 நுழைவுக் கட்டணம். நிகழ்வில் கலந்து கொண்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எத்தனை பேர்?
அரவிந்த்
விடைகள்1. முதலில் வாங்கியவிலை = 600; விற்ற விலை = 700; 700 - 600 = 100 (லாபம்)
இரண்டாவதாக வாங்கிய விலை = 800; விற்றவிலை = 700 ; 700 - 800 = - 100 (நட்டம்)
ஆகவே மொத்தத்தில் லாபமோ நட்டமோ இல்லை.
2. இதற்கு இரண்டு வழிமுறைகளில் விடை காணலாம்.
முதல் வழிமுறை
1+4=5 என்று வரும் விடையில் இரண்டாவது வரிசையில் முதல் வரிசை எண் 5ஐச் சேர்த்துக் கூட்ட = (5)+2+5=12. 12ஐ மூன்றாவது வரிசை எண்ணுடன் கூட்ட = (12)+3+6=21. ஆகவே அடுத்து வர வேண்டிய எண் = (21)+8+11 = 40
இரண்டாவது வழிமுறை
1+4=5 என்பதில் கூட்டலை பெருக்கலாக மாற்றி, அதனுடன் முதல் எண்ணைக் கூட்ட வேண்டும் = 1*4+(1)=5; இதே முறையைத் தொடர 2*5+(2)=12; 3*6+(3)=21; ஆக, வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் = 8*11+(8)=96
3. பெட்டிகள் = 2
பழங்கள் = 30 + 30 = 60
சுங்கச்சாவடிகள் = 30
முதலில் ஒரு பெட்டியைத் திறந்து முதல் 15 சுங்கச்சாவடிகளுக்கு இரண்டு பழங்கள் வீதம் கொடுத்தால் ஒரு பெட்டி முழுக்கக் காலியாகிவிடும். அடுத்துள்ள பெட்டியைத் திறந்து மீதமுள்ள 15 சுங்கச்சாவடிகளுக்கு (ஒரே ஒரு பெட்டிதான் கைவசம் இருப்பதால்) ஒரு பழம் வீதம் கொடுக்க, 15 பழங்கள் எஞ்சி இருக்கும்.
4. நான்கு பூனைகள் நான்கு எலிகளை நான்கு நிமிடத்தில் பிடிக்கின்றன.
ஆக, ஒரு பூனை, ஒரு எலியை நான்கு நிமிடத்தில் பிடிக்கும்.
12 நிமிடங்களில் ஒரு பூனை, மூன்று எலிகளைப் பிடிக்கும். (4*3 = 12)
ஆகவே 12 நிமிடங்களில் 12 பூனைகள் 36 எலிகளைப் பிடிக்கும் (12*3=36)
5. ஆண்கள் = 700 (700 x 3 = 2100)
பெண்கள் = 550 (550 x 2 = 1100)
குழந்தைகள் = 3750 (3750 x 0.48 = 1800)