கற்றாழை (Aloe Vera) மோர்
தேவையான பொருட்கள்:
சோற்றுக் கற்றாழை - 5 அங்குல நீளத் துண்டு
இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு
மோர் - 1 டம்ளர்
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி இலை - சிறிது

செய்முறை:
கற்றாழையைச் சிறு துண்டுகளாக வெட்டி, தோல் நீக்கவும். உள்ளிருக்கும் சோற்றைத் தண்ணீரில் ஐந்தாறு முறை கழுவும். (அப்போதுதான் வழவழப்பு போகும்). அதை மிக்ஸியில் போட்டு இஞ்சி சேர்த்து இரண்டு சுற்று சுற்றவும். அத்துடன் மோர், உப்பு, கொத்துமல்லி இலை சேர்த்தால் கற்றாழை மோர் தயார். இது உடலுக்குப் பல வகைகளிலும் நன்மை தரும் பானம்.

மரகதம் அம்மா,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com