தண்ணி வண்டி


இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நாயகனாக நடிக்கும் படம் இது. சம்ஸ்கிருதி கதாநாயகி. உடன் தேவதர்ஷினி, பாலசரவணன், வித்யுலேகா, மனோஜ் குமார், பாவா லட்சுமணன், 'காதல்' சுகுமார், 'ஆடுகளம்' நரேன், கிருஷ்ணமூர்த்தி, மதுரை முத்து, 'பிச்சைக்காரன்' மூர்த்தி என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது. மோசஸ் இசையமைக்கிறார். படத்தின் கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் மாணிக்க வித்யா. இவர், இயக்குநர்கள் ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபியின் உதவியாளராகப் பணியாற்றியவர். அப்பாவான தம்பி ராமையாவே படத்திலும் நாயகன் உமாபதிக்கு அப்பாவாக நடிக்கிறாராமே!

அரவிந்த்

© TamilOnline.com