தெரியுமா?: மானசி ஜோஷியின் சாதனை
உலகப் பாரா-பாட்மின்டன் போட்டிகள் உடற்குறைபாடுகள் கொண்டவர்க்கானதாகும். இதில் மகளிர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் இந்தியாவின் மானசி ஜோஷி. இந்தப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய பாரா-பாட்மின்டன் குழுவினர் 3 தங்கம் உட்பட 12 பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். "130 கோடி இந்தியர்கள் உங்கள் குழுவின் சாதனையில் மெத்தப் பெருமை கொள்கிறார்கள்" எனத் தமது வாழ்த்துச் செய்தியில் பிரதமர் கூறியுள்ளார். அந்த எண்ணிக்கையில் தென்றல் வாசகர்களும் இருக்கிறோம் என்பதில் ஐயமில்லை.© TamilOnline.com