எம்.எஸ்.வி. - வி.சி. குகநாதனை இணைக்கும் 'கைதட்டத்தானா கைகள்'
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பல்வேறு தோற்றங்களில் நடித்த 'ராஜபார்ட் ரங்கதுரை', முத்துராமன், லட்சுமி நடிப்பில் வெளி வந்த 'கனிமுத்துபாப்பா' போன்ற காலத்தால் மறக்க முடியாத படங்களை உருவாக்கிய எம். எஸ். விஸ்வநாதனும் வி. சி. குகநாதனும் மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பின்பு 'கைதட்டத்தானா கைகள்' என்கிற படத்திற்காகக் கைகோர்க்கிறார்கள்.

வெளிநாடுகளில் வாழும் பத்துத் தமிழ் தொழில் அதிபர்கள் சேர்ந்து தயாரிக்கும் இப்படத்தினை 'நனர்கலைப்பூங்கா' என்கிற நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

நவம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, அவர்களுடன் வடிவேலு வித்தியாசமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்.

'கைதட்டத்தானா கைகள்' ரசிகர்களின் கைதட்டலைப் பெறுமா?

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com