தேவையான பொருட்கள் பூசணிக் கீற்று - 1 தேங்காய் (துருவியது) - 1 கிண்ணம் அரிசி மாவு - 1 கிண்ணம் கோதுமை மாவு - 1/2 கிண்ணம் பச்சைமிளகாய் - 3 இஞ்சி - ஒரு சிறு துண்டு கறிவேப்பிலை - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிப்பதற்கு தயிர் - 1 மேசைக்கரண்டி
செய்முறை பூசணிக்காயைத் துருவி, எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும். மிளகாய், இஞ்சி, தேங்காயை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதை அரிசி, கோதுமை மாவுடன் போட்டு, பெருங்காயம், உப்பு, தயிர் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்திற்குக் கரைக்கவும். அத்துடன் கறிவேப்பிலை, கொத்துமல்லி பொடியாக நறுக்கிப் போட்டு அடுப்பில் எண்ணெயைக் காயவைத்து கரண்டியால் மொண்டு சிறு சிறு அப்பங்களாக ஊற்றிப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். மொறுமொறுவென்று தின்றுகொண்டே இருக்கலாம், அத்தனை ருசி!
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி |