சந்திரமுகியில் பிரபல பாடலான தேவுடாவின் பெயரில் புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறது சுந்தரி பிலிம்ஸ்.
அடிதடி, மகாநடிகன் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்தது எம். ஞானசுந்தரி. சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தை மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவிருக்கிறார்கள்.
மூன்று நாயகிகள் நடிக்கவிருக்கும் இப்படத்தின் இசையை தேவா அமைக்கவிருக்கிறார். முக்கிய வேடமொன்றில் ராதாரவி நடிக்கவிருக்கிறார்.
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினத்தின் மகன் பகவத் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்கும்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |