ஜெயம் ரவியின் 25வது படம்


ஜெயம் ரவி வித்தியாசமான கதையம்சமுள்ள படங்களாகத் தேர்ந்தெடுத்து நடிப்பவர். தனி ஒருவன், போகன் எனப் பல வெற்றிப்படங்களைத் தந்தவர். ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்ஷ்மணுடன் தனது 25வது படத்திற்காக இணைந்திருக்கிறார். பெயர் சூட்டப்படாத இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். ராதாரவி, தம்பி ராமையா, சதீஷ், சரண்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடமேற்றுள்ளனர். இசை: டி. இமான். வித்தியாசமான கதையம்சம் கொண்ட அதிரடி ஆக்‌ஷன் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com