கள்ளபார்ட்


அரவிந்த்சாமி கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. நாயகியாக ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். உடன் ஹரிஷ் பேரடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், பேபி மோனிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வசனத்தை ராதாகிருஷ்ணன் எழுத, 'என்னமோ நடக்குது', 'அச்சமின்றி' படங்களை இயக்கிய ராஜபாண்டி கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இசை: நிவாஸ் கே. பிரசன்னா. "பரபரப்பான ஆக்‌ஷன் த்ரில்லர் படம் இது. அரவிந்த்சாமி ஹார்ட்வேர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறார். ரெஜினா டான்ஸ் டீச்சர்" என்கிறார் கோலிவுட் கோவிந்து.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com