வி 1
நாயகனாக அருண் ராம் கேஸ்ட்ரோ, நாயகியாக விஷ்ணுபிரியா நடிக்கும் படம் இது. உடன் மைம் கோபி, காயத்ரி, மோனிகா, லிங்கா, லிஜீஷ் நடிக்கின்றனர். தடய அறிவியல் துறை அதிகாரி கதாநாயகன். இவருக்கு இருட்டைக் கண்டால் பயம்! இந்நிலையில் வி1 என்ற எண்ணைக் கொண்ட வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. அதைக் கதாநாயகன் விசாரிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அவனால் கொலையாளியைக் கண்டுபிடிக்க முடிந்ததா, இருட்டு பயம் போனதா என்பதைப் பல்வேறு சுவாரஸ்யமான முடிச்சுக்கள் கொண்ட கதை மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார், இதுவரை படங்களில் நடித்து இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் பாவெல் நவகீதன். இசை: ரோனி ரபேல்.தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com