மஞ்சள் பொங்கல்
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கிண்ணம்
பாசிப்பருப்பு - 1/4 கிண்ணம்
கடலைப்பருப்பு - 1/4 கிண்ணம்
துவரம்பருப்பு -1/4 கிண்ணம்
உளுத்தம்பருப்பு -1/4 கிண்ணம்
உப்பு - ருசிக்கேற்ப
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை
அரிசி, பருப்பு வகைகளைத் தனித்தனியாகக் கடாயில் வாசனை வரும்வரை சிவக்க வறுக்கவும். மிக்ஸியில் போட்டு கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். பிரஷர் பேனில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். நான்கு கிண்ணம் தண்ணீர், பொடித்த கலவை, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, குக்கரை மூடி, வேகவைத்து எடுக்கவும். திறந்து நன்கு கலந்து சூடாகப் பரிமாறவும்

இந்த இரண்டுமே மதுரை மாவட்டச் சிறப்பு உணவு வகைகளாகும். இரவு உணவாகச் செய்யலாம்.

கிருஷ்ணவேணி,
ஃபேர்ஃபேக்ஸ், வர்ஜீனியா

© TamilOnline.com