பச்சைக் குழம்பு
தேவையான பொருட்கள்
குழம்புக் காய்கள் (அரிந்தது) - 1 கிண்ணம்
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு - ருசிக்கேற்ப
கொத்துமல்லி விதை - 2 மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு -1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 மேசைக் கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை
கொத்துமல்லி விதை, துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், கடுகு, வெந்தயம், மிளகு, சீரகம் எல்லாவற்றையும் ஒன்றாக அரைமணி நேரம் ஊறவைக்கவும். இத்துடன் கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைக்கவும். புளியை ஊறவைத்துக் கசக்கி இரண்டு கிண்ணம் கரைசல் எடுத்துக்கொள்ளவும். கடாயில் காய்களுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவைக்கவும். இத்துடன் புளித்தண்ணீர் மற்றும் அரைத்த விழுது சேர்க்கவும். ஐந்து நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். நல்லெண்ணெயில் பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும். (வெந்த பருப்பு சேர்க்காமல் செய்யும் சாம்பார் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்)

கிருஷ்ணவேணி,
ஃபேர்ஃபேக்ஸ், வர்ஜீனியா

© TamilOnline.com