குலசேகரபட்டினம்


இந்தப் பெயரில் உருவாகி வரும் படத்தில் புதுமுகம் ஜேம்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீதேவி அறிமுகமாகிறார். உடன் உமா, பிரியா, மதுபாலா, ஜெயக்குமார், பூபதி எனப் பல புதுமுகங்கள். முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஆள்வான் இப்படத்தின் கதையை எழுதி, இயக்குகிறார். படத்தின் வில்லனும் அவரே. "தஞ்சை செல்வா, பிரவீன், சங்கர் என்ற மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைப்பது இப்படத்தின் சிறப்புக்களுள் ஒன்று" என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com