சிமிவேலி தமிழ்ப்பள்ளி: ஏழாம் ஆண்டு விழா
மே 18, 2019 அன்று கலிஃபோர்னியா சிமிவேலி தமிழ்ப்பள்ளியின் ஏழாம் ஆண்டு விழா நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. சான்டா கிளாரா தமிழ்ப்பள்ளி முதல்வர் வருகை தந்து, மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினார். பகல் உணவிற்குப் பிறகு கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.

அடிப்படை வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையான மாணவர்கள் சிறு, குறு நாடகங்களைப் பல்வேறு தலைப்புகளில் வழங்கினார்கள்.அக்பர் பீர்பல் கதை, விக்கிரமாதித்தன் கதை, நெகிழி, ஒற்றுமையே வலிமை, அதீதத் திரைநேரம், விவசாயம், விருந்தே மருந்து போன்றவை மாணவர்களின் தமிழ்பேசும் திறனை வெளிப்படுத்தியது. 'அலைபேசி ஆனந்தமா? அல்லலா?' என்ற தலைப்பிலான பட்டிமன்றம் அனைவரையும் சிந்திக்கத் தூண்டியது.

தமிழ்த் தொண்டாற்றும் ஆசிரியப் பெருமக்கள் மேடையில் கௌரவிக்கப்பட்டனர். காலைமுதல் மாலைவரை நடந்த நிகழ்ச்சிகளை முதல்வர் யோகா கந்தசாமி தொகுத்து வழங்கினார்.

வித்யாலக்ஷ்மி,
சிமிவேலி, கலிஃபோர்னியா

© TamilOnline.com