மே 26, 2019 அன்று இடைமேற்கு மாநிலத் தமிழ்சங்கம், உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை, அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் மூன்றும் இணந்து தமிழீழத்தில் 2009ஆம் ஆண்டு மே திங்களில் ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த எண்ணற்ற தமிழர்க்கு மரியாதை செலுத்தவும், நினைவு கூர்தலுக்காகவும் அரோராவில் (சிகாகோ) உள்ள Hesed House, 659 S. River Road, Aurora, IL: 60506) ஏதிலர் இல்லத்தில் வறியோர்க்கு உணவு வழங்கின. இதில் தமிழ்ப்பள்ளி மாணாக்கர்கள் (சாமா, சுபாசு, ஏடிரியன், பிரின்டென்), சிகாகோ புறநகர்ப் பகுதியில் வாழும் தொண்டர்கள் (திருவாட்டியர் கார்த்திகா, மெரிலின், திருவாளர்கள் கணேசன், வின்சென்ட்டு மற்றும் பாபு) பங்கேற்று, உணவு தயார் செய்து 90 மேற்பட்டோருக்கு உணவு வழங்கினர்.
பின்னர் சிறார்கள் வறியோர்க்கு, தமிழீழப் போராட்டம் பற்றிய விவரக்குறிப்பு, திருக்குறளின் சில அதிகாரக் குறிப்புகள், பிற நாட்டுப் பேரறிஞர் கண்ணோட்டத்தில் தமிழர் குறிப்புகள் போன்றவை அடங்கிய சிற்றிதழ் ஒன்றினையும், மறுநாள் காலைக்குச் சிறுதீனி உணவினையும் வழங்கினர்.
நிகழ்விற் பயனடைந்தோர் தொண்டர்க்கும், அமைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்தனர். 2019 ஆண்டின் மூன்றாம் வறியோர்க்கு உணவு நிகழ்வாகும் இது.
வ.ச. பாபு, சிகாகோ, இல்லினாய் |