தேவையான பொருட்கள் சாமை மாவு - 2 கிண்ணம் அரிசி மாவு - 1 கிண்ணம் உளுத்த மாவு (வறுத்து அரைத்தது) - 1/2 கிண்ணம் பொட்டுக்கடலை மாவு (வறுத்து அரைத்தது) - 1/4 கிண்ணம் மிளகாய்த்தூள் (அ) மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு சீரகம் - 1 தேக்கரண்டி வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை சாமை மாவை வெறும் வாணலியில் லேசாக வாசனை வரும்வரை வறுக்கவும். அரிசிமாவையும் அதேபோல் வறுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, சாமைமாவு, பொட்டுக்கடலை மாவு, உளுத்தமாவு, மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள், சீரகம், பெருங்காயம், வெண்ணெய், உப்பு எல்லாம் போட்டுப் பிசைந்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் மாவை தேன்குழல் அச்சில் போட்டுப் பிழியவும். பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இது மிகவும் சுவையான தேன்குழல்.
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்ஸி |