ஆண்ட்ரியா நாயகியாக நடிக்கும் படம் மாளிகை. தில் சத்யா இயக்குகிறார். இப்படத்தில் ஆண்ட்ரியாவுக்கு இரட்டை வேடம் - காவல்துறை அதிகாரி, முன்ஜென்ம இளவரசி. உடன் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார், மனோபாலா, 'ஜாங்கிரி' மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் கார்த்திக் ஜெயராம், இப்படத்தின்மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படம் பற்றி இயக்குநர் தில் சத்யா, "ஆக்ஷன், ஃபேன்டஸி, ஹாரர் என மூன்று ஜானர்களில் படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இளவரசி கதாபாத்திரம் ஃபேன்டஸி போர்ஷனில் இடம்பெறும். அது 400 வருடங்களுக்கு முன்பு நடக்கும் கதை. தவிர, போலீஸாக நடிக்கும் ஆண்ட்ரியா, ஒரு மாளிகைக்கு விசாரணைக்காகச் செல்கிறார். அங்கு அவருக்குக் கடந்தகால நினைவுகள் வருகின்றன. அப்போது என்ன ஆனது என்பதை ஃபேன்டஸி கலந்து சொல்லியிருக்கிறோம்" என்கிறார்.
அரவிந்த் |