தேவையான பொருட்கள் கம்பு (சிறு தானியம்) - 1 கிண்ணம் நாட்டுச் சர்க்கரை – 1/2 கிண்ணம் நெய் - 2 மேசைக்கரண்டி வறுத்த பாதாம் அல்லது முந்திரி - சிறிதளவு
செய்முறை கம்பு தானியத்தை வெறும் வாணலியில் இட்டு மிதமான சூட்டில் வறுக்கவும். படபடவென்று பொரிய ஆரம்பிக்கும்போது இறக்கி ஆறவிடவும். பிறகு மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். நெய்யை லேசாகச் சுடவைத்து அதில் கம்புமாவு, நாட்டுச் சர்க்கரை, வறுத்த பாதாம் பருப்புத் துண்டுகள் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும். இது எல்லோரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய, இரும்புச்சத்து நிறைந்த ஆரோக்கியமான லட்டு.
மரகதம்அம்மாள், அட்லாண்டா, ஜார்ஜியா |