2019 ஏப்ரல் 6 - 7 தேதிகளில் ஹூஸ்டன் (டெக்சஸ்) நகரில் 'திருக்குறள் விளையாட்டு' என்ற பெயரில் ஒரு போட்டி நடைபெற உள்ளது. தமிழ்நாடு அறக்கட்டளையின் ஹூஸ்டன் கிளை இந்தப் போட்டியை முன்னின்று நடத்துகிறது. இதில், போட்டியாளர் பிழையறப் பொருளோடு கூறும் ஒவ்வொரு குறளுக்கும் $1.00 வீதம் பரிசு வழங்கப்படும். இந்தப் போட்டியில் பதினெட்டு வயதிற்கு உட்பட்டோர் பங்கேற்கலாம். அதிக எண்ணிக்கையில் குறளும் பொருளும் கூறுகிற 5-11 மற்றும் 12-18 வயதிற்குட்பட்ட பங்கேற்பாளரின் தாய்க்கு ஒரு சிறப்பு பரிசு உண்டு. திருவள்ளுவரின் உருவம் நெய்யப்பட்டு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கைத்தறிச் சேலைதான் அந்தப் பரிசு.
பங்கேற்க விரும்புவோர் மார்ச் 30 தேதிக்குள் பெயரைப் பதிய வேண்டும். பங்கேற்போரின் வசதிக்காக, போட்டி மூன்று இடங்களில் நடக்கவுள்ளது.
விவரம் பின்மாறு:
ஏப்ரல் 6, 2019 - காலை 9 மணிமுதல் 12 மணிவரை இடம்: சுவீட்வாட்டர் கிறிஸ்டியன் சர்ச், 4141, சுவீட்வாட்டர் புலவார்ட், சுகர்லேண்ட், டெக்சஸ் 77479 தொடர்புக்கு: திரு. சொக்கலிங்கம் (832)656-4524 திருமதி. ஸ்ரீதேவி (713)855-4868
ஏப்ரல் 6, 2019 - காலை 9 மணிமுதல் 12 மணிவரை இடம்: மேசன் கிரீக் கம்யூனிட்டி சென்டர், 20201 கிங்க்ஸ்லேண்ட் புலவார்ட், கேட்டி, டெக்சஸ் 77450 தொடர்புக்கு: திரு. பிரபாகர் (713)392-5617 திருமதி. இளங்குழலி (713)409-9447
ஏப்ரல் 7, 2019 - காலை 9 மணிமுதல் 12 மணிவரை இடம்: ஸ்ரீ மீனாட்சி கோயில் - சரஸ்வதி கூடம், 17130 மக்ளீன் ரோடு, பியர்லாந்து டெக்சஸ் 77584. தொடர்புக்கு: திருமதி. மஞ்சு (330)715-2589 திருமதி. சித்ரா (832)738-7755
அறக்கட்டளை ஹூஸ்டன் கிளையின் தலைவி திருமதி. மாலா கோபால் இவ்வாறு அறிவித்துள்ளார்: வயதுவாரிப் பிரிவுகளில் புடவை பரிசாகப் பெற்ற இரண்டு தாய்மார்கள், அதிகமான குறள்களைக் கூறிய முதல் ஐவர், உயர்நிலைப் பள்ளியில் தேர்ச்சிபெற்று கல்லூரி செல்லும் மாணவர்கள், ஹூஸ்டனில் சேவை மனப்பான்மையில் சிறந்து விளங்கியதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து தாய்மார்கள் ஆகிய அனைவரும் அன்னையர் தினத்தை முன்னிட்டு, வரும் மே மாதம் 5ம் தேதி கவுரவிக்கப்படுவார்கள்.
போட்டியில் பங்கேற்கப் பதிவதற்கு: houston.tnfusa.org/thirukkural
மேலும் விவரங்களுக்கு:
youtube.com
நந்து ராதாகிருஷ்ணன், பியர்லாந்து, டெக்சஸ் |