ஐரா


நயன்தாரா நாயகியாக நடித்துள்ள படம் ஐரா. உடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுத, 'எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தை இயக்கிய கே.எம். சர்ஜுன் இயக்குகிறார். இசை : கே.எஸ்.சுந்தரமூர்த்தி. படத்தில் நயன்தாராவிற்கு இரட்டை வேடம் என்கிறார் கோலிவுட் கோவிந்து. ஒன்று துணிச்சலான பத்திரிகையாளர் வேடமாம். மற்றொன்று சாதுவான கிராமத்துப் பெண் வேடமாம். 'ஐரா' என்றால் 'ஐராவதம்' என்பதன் சுருக்கமாம்!

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com