ஆயிரம் பொற்காசுகள்


தேர்ந்தெடுத்துப் படங்களை நடித்துவரும் விதார்த்தின் அடுத்த படம் 'ஆயிரம் பொற்காசுகள்'. சரவணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் நாயகி ஜானவிகா. உடன் வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், செம்மலர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர் ரவி முருகையா இயக்குகிறார். இசை ஜோஹன். ஈரமான ரோஜாவே, அலெக்சாண்டர் உள்படப் பல வெற்றிப்படங்களை இயக்கிய கேயார் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படம் பற்றி, "கதை தொடக்கம் முதல் கடைசிவரை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும். கழிப்பறை தோண்டச் சென்ற இடத்தில் விதார்த், சரவணன் கூட்டணிக்கு ஒரு புதையல் கிடைக்கிறது. அந்தச் செய்தி பரவி ஊரே பங்கு கேட்கிறது. அதன் பிறகு என்ன ஆகிறது? அதுதான் கதை" என்கிறார் இவர்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com