ஜூலை 2005: குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக
5. சோற்றில் மறையாதது அரக்கன் முகமாகும் (6)
6. அடிக் காகிதம் (2)
7. முதலாண்டு முதற் பகுதி கடைசித்தம்பி வர மாறினான் (4)
9. வயது நேரம் தலைகளில்லாக குழப்பத்தில் சோகம் (4)
10. கையளவால் பிழைப்பை நடத்தி மணம் பரப்புபவள் (4)
12. தாமரையிலைகளைச் சுற்றி வரும் சோறு! (4)
13. தலையணையை அணைத்து வசி (2)
14. சக்திக்குள் வந்த கட்டாயம் (6)

நெடுக்காக
1. முடிவில்லாமல் கெடு, ஒப்பாரி வை (2)
2. அரிதாகக் காணப்படுகின்ற மூன்றாம் நபர் பூ சுற்றினார் (4)
3. அடங்கி ஆணி முனை தைத்த பந்து (4)
4. பிரம்மாண்டமான கார தானமா பூ வேலைப்பாடு? (6)
8. ஆபாசச் சுவையால் சாம்பாருக்குப் பிறகு மோர்தான் கிடைக்கும் (6)
11. ராசியான மாடு (4)
12. பாம்பு கடையும் பொருளின்றி அமரத்துவம் (4)
15. நெய்யென்றால் அதற்குத் தேவையானது எது? (2)

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com


ஜூன் 2005 : குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

குறுக்காக:3. சகதி, 5. தன்னலம், 6. சைகை, 7. அகழி, 8. பக்கவினை, 11. அசிங்கம்,12. கொப்பு, 14. ஆசி, 16. பணமூட்டை,17. சுவடு
நெடுக்காக:1. மாதக்கடைசி, 2. புனல், 3. சம்யுக்தா,4. திசை, 9. வியப்படைய, 10. அகப்படு,13. தைமூர், 15. சிசு

புதிர் விடைகள் அடுத்த மாத (ஆகஸ்டு 2005) இதழில் வெளிவரும்

© TamilOnline.com