தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 2 கிண்ணம் பொடி ரவை - 1 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப தேங்காய்த் துருவல் - 1 1/2 கிண்ணம் மிளகாய் வற்றல் - 6 - 8. சீரகம் - 1 மேசைக்கரண்டி பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்கு செய்முறை: ரவையை மிதமான தீயில் நல்ல மணம் வரும்வரை வறுக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, அதில் அரிசி மாவு, உப்பு சேர்க்கவும். மற்றப் பொருட்களை மிக்ஸியில் நைஸாகச் சட்னிபோல் அரைக்கவும். 4 மேசைக்கரண்டி எண்ணெயை நன்கு காய்ச்சி, வறுத்த மாவின்மேல் கொட்டி, கையால் உதிர்த்து, உதிர்த்துக் கலக்கவும். பிறகு, அரைத்த தேங்காய் விழுதை மாவில் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். தேவையானால், சிறிது நீர் சேர்க்கலாம். சிறிது, சிறிதாக மாவை எடுத்து, பென்சில்போல் உருட்டி, வளையல்கள் போல் செய்து, (படத்தில் உள்ளது போல்) சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மொறுமொறு கோடு பளே வாயில் கரையும்.
வசுமதி கிருஷ்ணசுவாமி |